IPL 2027 – கேப்டன் பதவி தாறோம், எங்க அணிக்கு வந்திடுங்க: சாம்சனிடம் பேசிய ஐபிஎல் அணி – விபரம் இதோ – this ipl team offers sanju samson a captaincy


ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங், அனல் பறந்து வருகிறது. டிரேடிங் பேச்சு வார்த்தையில் ஹர்திக் பாண்டியா பெயர் வந்த நிலையில், அவரை வாங்க பல அணிகள் கடும் போட்டி போடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹர்திக்கிற்கு 33 வயதாவதாலும், ஹர்திக்கால் முன்புபோல் அபாரமாக செயல்பட முடியாத காரணத்தினாலும், ஹர்திக்கை வாங்கி, மாற்றாக பார்மில் இருக்கும் வீரர்களை மும்பை இந்தியன்ஸுக்கு தர அணிகள் தயங்கி வருகின்றன.

இப்படி, ஹர்திக் பாண்டியாவை டிரேடிங்கில் அனுப்பி தரமான வீரர்களை வாங்க முடியாத நிலையில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், தற்போது வீரர்களை நேரடியாக தொடர்புகொண்டு பேச ஆரம்பித்துள்ளது. அப்படிதான், சஞ்சு சாம்சனை வாங்க, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், அவரிடம் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாம். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தால், கேப்டன் பதவியை தருகிறோம். மேலும், உங்களை 20 கோடிக்கு வாங்கவும் தயார் என மும்பை இந்தியன்ஸ் தெரிவித்துள்ளதாம்.

மும்பை இந்தியன்ஸுக்கு தேவை: மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக ஒரு தரமான இந்திய வீரர் தேவை. மேலும், டாப் ஆர்டரில் ஆடும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்டரும் தேவைப்படுகிறார். இந்த இரண்டு குறையையும் போக்கும் ஆற்றல் சஞ்சு சாம்சனிடம் இருக்கிறது. மேலும், சாம்சனால், கேப்டன்ஸியும் செய்ய முடியும். இதனால்தான், சாம்சனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறதாம்.

சிஎஸ்கேவிலும் பிரச்சினை: தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் கேப்டன்ஸி பிரச்சினை இருக்கிறது. கடந்த மூன்று சீசன்களின் பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கேவால் முன்னேற முடியவில்லை. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் கடந்த சீசனில் சராசரியாக 123 ஸ்ட்ரைக் ரேட்டில்தான் ஆடினார். மேலும், பிளேயிங் 11 தேர்விலும் ருதுராஜ் கெய்க்வாட்டால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்ற விமர்சனம் இருக்கிறது.

இருப்பினும், ஐபிஎல் 2027 சீசனுக்கு தன்னைதான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துவிட்டாராம். ஆனால், இந்த முடிவுக்கு சிஎஸ்கே வீரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட்டைவிட, சஞ்சு சாம்சன் சிறந்த கேப்டனாக இருக்கிறார். இதனால், அடுத்த சீசனுக்கு சாம்சனைதான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என சிஎஸ்கேவில் சில வீரர்கள், வெளிப்படையாகவே அணி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், சஞ்சு சாம்சனும், தனக்கு கேப்டன் பதவி வேண்டும் என கோரிக்கை வைக்க ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், கேப்டனாக இருந்தபோது, ஜாஸ் பட்லரை தேவையில்லாமல் ஏன் வெளியேற்றினீர்கள் எனக் கேட்டதற்குதான், சாம்சனுக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. அதன்பிறகுதான், சாம்சன் டிரேடிங்கில் வெளியேறினார். குறிப்பாக, தோனிக்கு அடுத்து தனக்கு முக்கியத்தும் கொடுத்து, கேப்டன் பதவியையும் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான், சாம்சன் சிஎஸ்கேவில் சேர்த்ததாக கருதப்படுகிறது. இதனால்தான், ஐபிஎல் 2027 சீசனில் தனக்கு கேப்டன் பதவி வேண்டும் என சாம்சன் கேட்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

விரைவில், சிஎஸ்கே அணி நிர்வாகம், புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்து அறிவிக்க உள்ளது. அப்போதே, கேப்டன் பதவி தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகும். அப்போது, சாம்சனுக்கு கேப்டன் பதவி இல்லை எனத் தெரிய வந்தால், அவர் டிரேடிங்கில் மும்பை இந்தியன்ஸுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறதாம்.

மதுரை சமயன்

ஆசிரியர் பற்றிமதுரை சமயன்மதுரை சமயன், சமயம் தமிழ் இணையதளத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரொடியூசராக பணிபுரிந்து வருகிறார். செய்தி துறையில் 7 வருடங்கள் அனுபவம் கொண்ட இவர், விளையாட்டு செய்திகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். சென்னை லயோலா கல்லூரியில் முதுகலை டிஜிட்டல் இதழியல் பட்டத்தை பெற்றார். ஐபிஎல், சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், கால்பந்து பிரிவுகளில் முக்கிய செய்திகளை எழுதி வருகிறார். அரசியல் செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் உண்டு. நக்கல், நையாண்டியுடன் சுவாரசிய செய்திகளை கொடுப்பதில் முன்னுரிமை கொடுத்து வருகிறார். Coverage Specialization: கிரிக்கெட் வீரர்களின் செயல்பாடு, கிரிக்கெட் போட்டியின் நகர்வு, கால்ந்து செய்திகள்.… மேலும் படிக்க



Source link

Scroll to Top