மீண்ட பாகிஸ்தான்
அசான் அவைஸ் 59 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷான் மசூத் சிறப்பாக விளையாடி 95 ரன்கள் குவித்தார். சதத்தை நெருங்கிய நிலையில், டான் லாரன்ஸ் எடுத்த அபாரமான கேட்ச் மூலம் அவர் ஆட்டமிழந்தார். அதன்பிறகு பாபர் அசாம் தனது பங்குக்கு 76 ரன்கள் சேர்த்தார். சவுத் ஷகீல் 29 ரன்களும், காசி கோரி 16 ரன்களும் எடுத்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணி படிப்படியாக இங்கிலாந்தின் முன்னிலையை குறைத்தது.
318 ரன்கள்
பாகிஸ்தான் அணி 318 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தபோது, களமிறங்கிய 21 வயதான அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ரசாவுல்லா, போட்டியின் போக்கையே மாற்றினார்.
நம்பர் 9 வீரராக களமிறங்கிய அவர், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை எந்தவித அச்சமும் இல்லாமல் எதிர்கொண்டு பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களாக விளாசத் தொடங்கினார்.


