விளையாட்டு உடை முதல் மருத்துவ பரிசோதனை வரை: தமிழக பள்ளிக் கல்வித் துறையின் புதிய அறிவிப்புகள் என்னென்ன?


அரசு, தனியார் மற்றும் பெருநிறுவன மருத்துவமனைகளின் பங்களிப்புடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல், கண் மற்றும் காது பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

1 முதல் 12ம் வகுப்பு வரை 2027-28-ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அறிவு பாடத்திட்டம் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.

மாணவர்களை நாளைய தொழில்நுட்ப முன்னோடிகளாக மாற்ற செயற்கை நுண்ணறிவு எந்திரவியல், புதுமை மற்றும் மெய்நிகர் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து டிஎன் ஸ்பார்க் திட்டம் செயல்படுத்தப்படும்.

கல்வியின் வலுவான அடித்தளத்தை மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அளிக்க, 414 பள்ளிகளில் ஆயத்தப் பயிற்சி மையங்களில் உள்ள 9731 குழந்தைகளுக்கு நவீன கற்றல், பயிற்சி உபகரணங்கள் வழங்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் மகிழ்வான கற்றல் சூழலை உருவாக்க 37,417 பள்ளிகளுக்கு ரூ.187.29 கோடி ஒருங்கிணைந்த பள்ளி மானியம் வழங்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உலகத்தர கற்பித்தலுக்குத் தேவையான அறிவு, திறன் மற்றும் தலைமைத்துவத்தை வழங்க ரூ.11.30 கோடியில் டிஎன் – லீட்ஸ் திட்டம் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.

பொது நூலகங்கள் முழுமையான மின்னுறு அறிவு மையங்களாக மாற்றப்படுவதுடன், ஸ்மார்ட் நூலக அட்டை வழங்கப்படும்.

சென்னை புத்தக கண்காட்சிக்கான அரசு மானியம் ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தி ஆண்டுதோறும் பபாசி அமைப்புக்கு வழங்கப்படும்.



Source link

Scroll to Top