உண்மை சம்பவ கதையில் அதர்வாவின் புதிய படம்… ரிலீஸ் அப்டேட்


இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி, ‘காளி’ என்ற இளைஞராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜா ஜாவேரி நடித்துள்ளார். மேலும், தம்பி ராமையா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் குழு

‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜமோகன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அஜய் கிருஷ்ணா தயாரித்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘அட்ரஸ்’

இந்த நிலையில், ‘அட்ரஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வித்தியாசமான கதைக்களம் மற்றும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.



Source link

Scroll to Top