அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு | BJP releases candidates list for Tamil Nadu Assembly elections 2026, No seat for Annamalai


Chennai

oi-Vigneshkumar

சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. பாஜக இந்த முறை 27 தொகுதிகளில் போட்டியிடும் சூழலில் வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி நிலவி வந்ததாகக் கூறப்பட்டது. இதற்கிடையே அனைத்து பேச்சுவார்த்தையும் முடிந்து இப்போது பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. சாத்தூர் தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன், அவினாசி தொகுதியில் எல் முருகன் போட்டியிடுகிறார்.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. அனைத்து கட்சிகளுமே தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்த முறை தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக போட்டியிடுகிறது. ஓராண்டுக்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், இரு கட்சிகளும் இணைந்தே செயல்பட்டுவருகிறது.

BJP candidate list

பாஜக

அதிமுக கூட்டணியில் இந்த முறை பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த தொகுதிகளில் வேட்பாளர்களை இறுதி செய்வதில் சிக்கல் நிலவுகிறது. ஒரே தொகுதியில் போட்டியிடப் பல முக்கிய நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளதால், வேட்பாளர் தேர்வில் இழுபறி நிலவுகிறது. சமூக ரீதியான வாக்குகளைப் பெறவும் யாரை நிறுத்த வேண்டும் என்பதையும் பாஜக ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழகம் மற்றும் மேற்கு மண்டலங்களில் குழப்பம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆலோசனை

கடந்த ஒரு வாரமாகவே வேட்பாளர் தேர்வு தொடர்பாகவே ஆலோசனைகள் நடந்து வருகிறது. மாநில தலைவர்கள் உடன் பியூஷ் கோயல் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வந்தார். இருப்பினும், வேட்பாளர் தேர்வில் இழுபறியே நிலவியது. இதன் காரணமாகவே அதிருப்தி அடைந்த பிரதமர் மோடி, நாளை நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் பிரச்சார கூட்டத்தையும் கூட ரத்து செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

BJP candidate list

இதற்கிடையே வேட்பாளர்கள் தேர்வு இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில், இன்று அவை இறுதி செய்யப்படும் என கூறப்பட்டது. இன்றும் ஞாயிற்றுக்கிழமையும் அரசு விடுமுறை நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. எனவே, நாளை மற்றும் திங்கள் என வேட்புமனு தாக்கல் செய்ய இரு நாட்கள் மட்டுமே உள்ளது.

BJP candidate list

முக்கிய தலைவர்கள்

இந்தச் சூழலில் தான் பிற்பகலில் இப்போது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சாத்தூர் தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன், அவினாசி தொகுதியில் எல் முருகன் போட்டியிடுகிறார்கள், நாகர்கோவில் தொகுதியில் எம்ஆர் காந்தி, கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் மீண்டும் போட்டியிடுகிறார்கள். விளவங்கோடு தொகுதியில் விஜயதாரனிக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல்

  1. ஆவடி- எம். ராஜசிம்ம மஹிந்திரா (எம். அஷ்வின்குமார்)
  2. மயிலாப்பூர்- தமிழிசை சௌந்தரராஜன்
  3. தளி- டாக்டர் நாகேஷ் குமார்
  4. திருவண்ணாமலை- சி.ஏழுமலை
  5. ராசிபுரம் (SC)- டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார்
  6. மொடக்குறிச்சி- கிருத்திகா ஷிவ்குமார்
  7. உதகமண்டலம்- போஜராஜன்
  8. அவினாசி (SC)- டாக்டர். எல்.முருகன்
  9. திருப்பூர் தெற்கு- எஸ்.தங்கராஜ்
  10. கோவை வடக்கு- வானதி சீனிவாசன்
  11. திருவாரூர்- கோவி சந்துரு
  12. தஞ்சாவூர்- எம்.முருகானந்தம்
  13. கந்தர்வகோட்டை (SC)- சி. உதயகுமார்
  14. புதுக்கோட்டை- என். ராமச்சந்திரன்
  15. அறந்தாங்கி- கவிதா ஸ்ரீகாந்த்
  16. திருப்பத்தூர்- கே.சி. திருமாறன்
  17. மானாமதுரை (SC)- பொன். வி.பாலகணபதி
  18. மதுரை தெற்கு- பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன்
  19. சாத்தூர்- நைனார் நாகேந்திரன்
  20. ராமநாதபுரம்- ஜிபிஎஸ் கே.நாகேந்திரன்
  21. திருச்செந்தூர்- கேஆர்எம் ராதாகிருஷ்ணன்
  22. வாசுதேவநல்லூர் (SC)- அனந்தன் அய்யாசாமி
  23. ராதாபுரம்- எஸ்.பி பாலகிருஷ்ணன்
  24. நாகர்கோவில்- எம்.ஆர் காந்தி
  25. குளச்சல்- டி.சிவகுமார்
  26. பத்மநாபபுரம்- பி. ரமேஷ்
  27. விளவங்கோடு- எஸ்.விஜயதரணி



Source link

Scroll to Top