Chennai
oi-Shyamsundar I
சென்னை: தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, குடும்பத் தலைவிகளின் வாக்குகளைக் குறிவைத்து தி.மு.க தரப்பில் அதிரடியான ஒரு ‘பொருளாதாரப் புரட்சி’த் திட்டம் தயாராகி வருவதாகக் கோட்டை வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. ஏற்கனவே அமலில் இருக்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தோடு, புதிதாக ஒரு ‘கூப்பன்’ திட்டமும் இணையப் போவதுதான் இப்போதைய ஹாட் டாபிக்!

என்ன அந்த டபுள் ஜாக்பாட்?
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு கிடைக்கப்போகும் அந்த 10 ஆயிரம் ரூபாய் கணக்கு இதுதான்:
பாகம் 1: மகளிர் உரிமைத் தொகை உயர்வு
தற்போது மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாய் உரிமைத் தொகையை, 2000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதுதான் முதல் கையெழுத்தாக இருக்கும் என்கிறார்கள். இது நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
பாகம் 2: ரூ.8,000 மெகா கூப்பன்
தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட உள்ள மிக முக்கியமான அம்சம் – இல்லத்தரசி கூப்பன் மூலம் வழங்கப்படும் 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்கள். இது அத்தியாவசியத் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
திமுக-வின் தேர்தல் அறிக்கையில் ‘ஹீரோயின்’ ஆக ஜொலிக்கும் ‘இல்லத்தரசி’ கூப்பன் திட்டம், இப்போது தமிழகத் தேர்தல் களத்தின் ஹாட் டாபிக். ஒரு முறை வழங்கப்படும் இந்த 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பனை வைத்து, ‘வீட்டு உபயோகப் பொருட்களை (Electronic Appliances) வாங்கிக் கொள்ளலாம்’ என முதல்வர் அறிவித்திருந்தார்.
இல்லத்தரசி கூப்பன் என்ற பெயரில் 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனைப் பயன்படுத்தி வாஷிங் மெஷின், டி.வி., ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு புதிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வீட்டு உபயோகப் பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக்கொள்ளலாம் அல்லது
எளிமையாகச் சொன்னால், ரேஷன் கார்டு வைத்திருக்கும், வருமான வரி செலுத்தாத குடும்பங்களின் பெண் தலைவிகளுக்கு 8,000 ரூபாய் மதிப்புள்ள ஒருமுறை பயன்படுத்தக்கூடிய (One-time) கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பனை வைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்குத் தேவையான எலக்ட்ரானிக் பொருட்களை நீங்களே வாங்கிக்கொள்ளலாம்.
இந்த இரண்டையும் சேர்த்தால், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்குக் கிடைக்கப்போகும் மொத்தப் பயன் 10,000 ரூபாயைத் தொடும். இதுதான் அந்த “டபுள் ஜாக்பாட்” கணக்கு!
யாரெல்லாம் எலிஜிபிள்? (தகுதிகள் என்ன?)
குடும்பத் தலைவிகள்: ரேஷன் கார்டில் குடும்பத் தலைவியாகக் குறிப்பிடப்பட்டுள்ள பெண்கள் அல்லது குடும்பத்தின் முதன்மைப் பெண் உறுப்பினர்கள்.
வருமான வரம்பு: ஆண்டு வருமானம் வருமான வரி கட்டாத அளவிற்கு இருக்க வேண்டும்.
நில உடைமை: ஐந்து ஏக்கருக்கும் குறைவான நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கும் குறைவான புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள்.
மின்சாரப் பயன்பாடு: வீட்டு உபயோக மின்சாரம் ஆண்டுக்கு சராசரியாக 3600 யூனிட்டிற்கும் குறைவாகப் பயன்படுத்துபவர்கள்.
விதிவிலக்கு: அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் ஏற்கனவே ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இதில் சில கட்டுப்பாடுகள் உண்டு. .


